தஞ்சாவூர்: வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு.. பதற்றம்

887பார்த்தது
தஞ்சாவூர்: வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு.. பதற்றம்
தஞ்சை அருகே சானூரப்பட்டியைச் சேர்ந்த குகன் (21) மற்றும் தமிழ்வளவன் (22) ஆகிய இருவரும் வல்லத்தில் ஒரு சுபநிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி