தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம்

1பார்த்தது
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் நியமனம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (23.02.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் வேலுமணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் இராமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு. பாலகணேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திக் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டம் தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி