தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவர் விக்னேஷின் தந்தை உருக்கமான பேட்டியளித்துள்ளார். தனது இரட்டை மகன்களும் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற நிலையில், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்குச் சென்றது தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்து குறித்து மதியம் 12 மணிக்கே தகவல் கிடைத்ததாகவும், தற்போது மகன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து விளக்கம் கேட்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.