கும்பகோணம்: சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டோர் வழக்கில் விடுதலை

416பார்த்தது
கும்பகோணம்: சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டோர் வழக்கில் விடுதலை
கடந்த 2020ஆம் ஆண்டு கும்பகோணத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டம் தொடர்பாக திமுக எம்.பி. சு. கல்யாணசுந்தரம், சிபிஎம் மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், விசிக தமிழருவி உள்ளிட்டோர் மீது அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்திருந்தது. தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் 'பொய் வழக்கு' என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, திங்கள்கிழமை நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி