தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து. ரோசி தலைமை தாங்கினார். தஞ்சை மண்டல கல்
லூரிக் கல்வி இயக்குனர் அ. குணசேகரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில், இக்கல்லூரி மாணவிகள் 350 பேர் மற்றும் பிற கல்லூரிகளைச் சேர்ந்த 150 மாணாக்கர்கள் என மொத்தம் 500 பேர் பங்கேற்றனர். 27 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில், தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.