தஞ்சை மாவட்டம், திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட 31 ஏக்கர் நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி வகுப்புகள் நடத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆலோசனையின்படி, கோட்டாட்சியர் நித்யா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை சென்று நிலத்தை மீட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சிறைத்துறை வசம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தில் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.