தஞ்சை சிறுமியை பாலியல் தொல்லை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

0பார்த்தது
தஞ்சை சிறுமியை பாலியல் தொல்லை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை
தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டையைச் சேர்ந்த தீபக் (31) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. தமிழரசி, குற்றவாளி தீபக்குக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 5 லட்சம் நிவாரணம் பெற்றுத்தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி