நாளை முதல் தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லாரிகள் ஓடாது

0பார்த்தது
நாளை முதல் தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லாரிகள் ஓடாது
பிப்ரவரி 16 (திங்கட்கிழமை) முதல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் லாரிகள் இயங்காது. லாரிகளுக்கான தகுதிச் சான்றிதழ் (FC) புதுப்பிப்புக் கட்டணம் ₹850-லிருந்து ₹28,200 வரை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 17-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் அவசரக் கூட்டத்தில், தமிழகம் தழுவிய வேலைநிறுத்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி