தஞ்சை பெரியகோயிலில் மகா சிவராத்திரி கோலாகலம்

522பார்த்தது
தஞ்சை பெரியகோயிலில் மகா சிவராத்திரி கோலாகலம்
தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. முதல் கால பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கும், இரண்டாம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 2 மணிக்கும், நான்காம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடைபெற்றன. ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி