தஞ்சாவூர் ராஜகோபாலசாமி தெரு கிட்டப்பா வட்டாரத்தில், 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மராத்தியர் காலக் கல்வெட்டு ஒன்றை வரலாற்று ஆய்வாளர் மணி. மாறன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர். 1887 மற்றும் 1889-ஆம் ஆண்டுகளில் செதுக்கப்பட்ட இக்கல்வெட்டில், அண்ணுபாட்டகர் மற்றும் நாகோபாட்டகர் குடும்பத்தினர் செய்த தருமக் காரியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. 400 ரூபாய் நிரந்தர வைப்பு நிதியின் வட்டித் தொகையைக் கொண்டு, துவாதசி கட்டளையாகப் பத்து பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்ற உயில் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கால சத்திர நிர்வாகம் மற்றும் அறக்கட்டளை முறைகளை அறிய முடிகிறது.