தஞ்சாவூர்-சரசுவதி மகால் நூலகத்தில் அமைச்சர் அன்பில் ஆய்வு

69பார்த்தது
தஞ்சாவூர்-சரசுவதி மகால் நூலகத்தில் அமைச்சர் அன்பில் ஆய்வு
தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்தை பெற்ற தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். 

இந்த நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழ்நாட்டின் கலாசாரத்தை இதுபோன்ற நூலகங்களில் கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்து பெற்ற இந்த நூலகத்தில், மழை நீர் கசிவுகள் இருக்கக்கூடாது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இதற்காக அருகிலேயே புதிதாகக் கட்டடம் கட்டி, சில தளவாடப் பொருள்களை அங்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். 

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தமிழக முதல்வர் கூறியபடி வழக்குத் தொடுப்பதற்கான பணி நடைபெறுகிறது. கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்குகிறது. பள்ளிக்கூடம் தொடங்கும் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், பை உள்ளிட்ட விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும். என்றார் அமைச்சர். அப்போது, மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் எஸ். மார்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி