பேராவூரணியில் ரூ. 4.21 கோடி சாலை பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

316பார்த்தது
பேராவூரணியில் ரூ. 4.21 கோடி சாலை பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள 7 ஊராட்சிகளில், ரூபாய் 4 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் 10 புதிய சாலை பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் சனிக்கிழமை காலை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராமப்புறங்களில் துவக்கி வைக்கப்பட்ட புதிய சாலை பணிகளுக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி