தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் மழை பாதித்த விவசாயிகளைச் சந்திக்காமல், நெல் மூட்டை ஏற்றுவதை மட்டும் பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்த ஆட்சிக்கு விரைவில் முடிவுரை எழுதப்படும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அவர் கூறினார்.