தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், சதீஷ்குமார், ராஜசேகர் ஆகியோரால் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. மேலும், திருவையாறு நீதிமன்ற வளாகத்தில் நூலகம், பாதுகாப்பு அறை, புதுப்பிக்கப்பட்ட கட்டிடம், கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அறை, கேண்டீன் ஆகியவையும் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டன. மூன்று இடங்களிலும் மொத்தம் ரூபாய் 3.77 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி வேல்முருகன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி. ராஜாராம் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேஜிஸ்திரேட் மகாலட்சுமி நன்றி கூறினார்.