சாலியமங்கலம் பேரூராட்சியுடன் திருபுவனத்தை இணைக்க எதிர்ப்பு

79பார்த்தது
சாலியமங்கலம் பேரூராட்சியுடன் திருபுவனத்தை இணைக்க எதிர்ப்பு
அம்மாபேட்டை ஒன்றியம் திருபுவனம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று தஞ்சாவூரில் ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜத்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளது: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் திருபுவனம் ஊராட்சியில் 2,150 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருபுவனம் ஊராட்சியை சாலியமங்கலம் பேரூராட்சியுடன் இணைத்தால், இந்த ஊராட்சி மக்களின் வாழ்வாதாரம், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதி பொதுமக்கள் நலன், திருபுவனம் ஊராட்சி மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சாலியமங்கலம் பேரூராட்சியுடன் திருபுவனம் ஊராட்சியை இணைக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்