ஒரத்தநாடு லேத் பட்டறை உரிமையாளர் விபத்தில் பலி

2பார்த்தது
ஒரத்தநாடு லேத் பட்டறை உரிமையாளர் விபத்தில் பலி
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டையைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் ப. மகேந்திரன் (40), கடந்த வியாழக்கிழமை மாலை தனது பட்டறைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you