தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள அரசா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் சனிக்கிழமை (பிப். 7) காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன. இதில் 5-8, 9-12, 13-16 ஆகிய மூன்று வகைப் பிரிவுகளில் குரலிசை, பரதம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும். பங்கேற்பாளா்கள் வயதுச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் போன்ற விவரங்களுடன் வர வேண்டும். பங்கேற்போருக்குச் சான்றிதழும், வென்றோருக்குப் பரிசுகளும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.