.தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜம்புகேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை வெளியே வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிட்லபாக்கத்தில் சமூக நலத் துறை நடத்தும் பெண்களுக்கான காப்பகத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
ஆனால், அங்கு கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. எங்கெங்கு காப்பகம் உள்ளதோ, அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் கண்காணிப்பு அவசியம் தேவை. மேற்கு மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், ஈரோட்டில் முதியவர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
இதற்கு காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் பதில் அளிக்க வேண்டும். இதற்கு வரும் 2026 தேர்தலில் சரியான பாடம் கிடைக்கும். தமிழ்நாடு வளர்ந்துள்ளதாக திமுகவினர் கூறினாலும், உண்மை அவ்வாறு இல்லை. இதுவரை யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. எனவே இந்த ஆட்சி இருக்கக்கூடாது. அதற்கான வேலைகளைச் செய்து வருகிறேன் என்றார் சசிகலா.