ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (5ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பப்பட்டு, காவரப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, குலமங்கலம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும். இதேபோல், தஞ்சை அருகே ஈச்சங்கோட்டை பகுதியிலும் நாளை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வர மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களின் கவனத்திற்கு.