தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் மே 30-ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரந்தை, திருவையாறு, பள்ளியக்ரஹாரம், திட்டை, அரண்மனைப் பகுதிகள், கண்டியூர், விளார், நாஞ்சிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.