தஞ்சாவூர் மாவட்டம் மேலஊரணிபுரத்தில் விளைநிலங்கள், கோயில் மற்றும் பள்ளிக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அதனை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதேபோல், தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியிலும் குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடையால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதாக வணிகர் சங்கத்தினர் புகார் அளித்து, அந்தக் கடையையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.