தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை வயல்வெளிகளில், அரிதாகக் காணப்படும் 6 "வண்ணத்தி நாரைகள்" கண்டறியப்பட்டுள்ளன. வட இந்தியாவில் அதிகம் காணப்படும் இப்பறவைகள், வலசை பருவம் முடிந்த பிறகும் தஞ்சை பகுதியில் தென்படுவது இதுவே முதல்முறை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினர் இப்பறவைகளை நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். சுற்றுச்சூழலின் சமநிலைக்கு முக்கிய பங்காற்றும் இப்பறவைகளைப் பாதுகாக்கவும், அவற்றின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும் ஆய்வுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.