தஞ்சை பெரியகோயில் அகழியில் கருவேலமரங்கள் அகற்றும் பணி

1பார்த்தது
தஞ்சை பெரியகோயில் அகழியில் கருவேலமரங்கள் அகற்றும் பணி
தஞ்சாவூர் பெரியகோயில் மற்றும் மாநகரைச் சுற்றியுள்ள 5 கி.மீ நீள அகழி மற்றும் நீர்வழிப்பாதைகளில் உள்ள கருவேலமரங்கள், புதர்களை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற உறுப்பினர் இரா. விஜய்சரவணன் ஆகியோர் இப்பணியைத் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு நீர்வளத்துறை பராமரிப்பு நிதியின் கீழ் ₹3.5 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 7 புதிய அதிநவீன ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்புடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் மாவட்டத்தின் பிற நீர்நிலைகளைத் தூர்வாரவும், பேரிடர் மீட்புப் பணியிலும் பயன்படுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி