தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை வழங்குவதை, பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.