தஞ்சாவூரில் மரக்கன்றுகள் நடும் விழா

64பார்த்தது
தஞ்சாவூரில் மரக்கன்றுகள் நடும் விழா
சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமலைசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் இருபதுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்தும், அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், முதல்வர் மருந்தகம் குறித்தும், பொது விநியோக திட்ட அங்காடியில் மக்களுக்கு கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் குறித்தும், சங்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் உரையாற்றினார் நிகழ்ச்சியில் தஞ்சை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமி ழங்கை, இணேப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் பெரியசாமி மற்றும் குடந்தை மத்திய கூட்டுறவு இணைப் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் முத்துகுமார், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் கூட்டுறவு சார்பதிவாளர்,
மேலாண்மை இயக்குனர் அன்புச்செல்வன், பொது விநியோக திட்ட அலுவலர் பிரசாத் மற்றும் வங்கி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி