தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னாவின் பைக் செவ்வாய்க்கிழமை திருட்டுப் போனது. இதேபோல் மானோஜிப்பட்டி ராதிகாவின் பைக் அக்டோபர் 30 அன்று ஈஸ்வரி நகரில் திருடப்பட்டது. இது குறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில், அம்மா குளத்தைச் சேர்ந்த கிசாந்த் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.