தஞ்சாவூர் அருகே விபத்தில் சிங்கப்பூர் பெண் பலி

4பார்த்தது
தஞ்சாவூர் அருகே விபத்தில் சிங்கப்பூர் பெண் பலி
சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊரான மன்னார்குடிக்கு திரும்பிய விஜயா (42) என்ற பெண், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே வியாழக்கிழமை அதிகாலை நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 6 பேர் திருச்சி விமான நிலையத்திலிருந்து வேன் மூலம் மன்னார்குடி புறப்பட்டபோது, ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவிலும், மற்ற 4 பேர் லேசான காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்தவுடன் ஓட்டுநர் தப்பியோடினார்.

தொடர்புடைய செய்தி