தஞ்சாவூர், திருவையாறில் உள்ள தியாகராஜர் ஆஸ்ரமத்தில் தை மாத பஞ்சமியை முன்னிட்டு தியாகராஜ சுவாமிக்கு பரம்பரை பூஜா ஸ்தானி கர் தியாகராஜ சர்மா சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தினார். கர்நாடக இசை கலைஞர்கள் பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் மற்றும் சம்பிரதாய கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.