தஞ்சாவூர் வடக்குவீதி ராஜகோபால சுவாமி கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. பிரதோஷ தினத்தை முன்னிட்டு இத்தலத்தில் மேற்கு திருச்சுற்றில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் பார்வதி தேவி கங்கை தேவி சமேதராக காட்சி தரும் சிவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இத்தலத்தில் மனித உருவில் சிவபெருமான் சிவேந்திராக காட்சி தருகிறார். இங்கு மூலவர் சக்கரத் தாழ்வார். இங்கு பக்தர்கள் ராஜகோபுரம் பின்புறம் மூலவரை நோக்கி உள்ள யோக நரசிம்மர் மற்றும் கல்யாண நரசிம்மரை ஒவ்வொரு பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் கர்மவினைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.