தஞ்சாவூர் பெரிய கோயிலில் தூய்மைப் மணியில் ஈடுபட்ட மாணவர்கள்

0பார்த்தது
உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு, நவம்பர் 19 முதல் 25 வரை கொண்டாடப்படும் இந்த வேளையில், உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இந்திய தொல்லியல் துறை சார்பில் மரபு நடை மற்றும் தூய்மைப் பணி இன்று நடைபெற்றது. தொல்லியல் துறை அதிகாரிகள் தலைமையில் சமூக ஆர்வலர்கள், சிவனடியார்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு கோவிலில் உள்ள குப்பைகள் மற்றும் செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். பாரம்பரிய சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி