நாடு விடுதலை பெற்ற பிறகு மொழிவழி மாநிலங்கள் அமைக்கும் போராட்டங்களின் அடிப்படையில், 1956 நவம்பர் 1 அன்று தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதன் 69-ஆம் ஆண்டு விழா தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பீகார் தேர்தல் பரப்புரைகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுவதாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.