தஞ்சை: நாய் கடித்ததில் சாக்கடையில் விழுந்த 3 வயது சிறுவன்:

0பார்த்தது
தஞ்சை: நாய் கடித்ததில் சாக்கடையில் விழுந்த 3 வயது சிறுவன்:
தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில், பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தபோது, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் (3) என்ற சிறுவனை நாய் ஒன்று துரத்தி கடித்துள்ளது. வலியால் அலறிய சிறுவன் அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்து பலத்த காயமடைந்தான். உறவினர்கள் சிறுவனை மீட்டு தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி