வியாழக்கிழமை இரவு கோவையில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணப்படையூர் பகுதியில் முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட மொத்தம் 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த சுவாமிமலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.