பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை முன்னிட்டு, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தெற்கு மாவட்ட பாஜகவினர் மாநில செயற்குழு உறுப்பினர் உமாபதி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.