தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாநகரைச் சுற்றியுள்ள அகழியில், கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக அரசின் ரூ. 3.50 கோடி மதிப்பிலான 7 புதிய JCB இயந்திரங்கள் மூலம் ஏரிகள் மற்றும் நீர்வழித்தடங்களைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மே 18 முதல் பெரிய கோயில் அகழியைத் தூய்மைப்படுத்தும் பணி CSR மற்றும் நன்கொடையாளர்கள் நிதி பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. ஆய்வின் போது தொல்லியல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.