தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 545 மனுக்கள் பெறப்பட்டன. மானோஜிபட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சந்திரா காதொலிக்கருவி வேண்டி அளித்த மனுவை பரிசீலித்த ஆட்சியர், உடனடியாக அவருக்கு அங்கேயே காதொலிக்கருவியை வழங்கி உத்தரவிட்டார். இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.