தஞ்சாவூர்: கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

388பார்த்தது
தஞ்சாவூர்: கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மற்றும் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிர்ணயித்த ரூ. 57,800 ஊதியம் மற்றும் ஆண்டு முழுவதும் தடையின்றி ஊதியம் வழங்கக் கோரி இன்று 9வது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். பணிப்புறக்கணிப்புடன் காத்திருப்பு போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி