தஞ்சை மாநகராட்சியில் ரூ. 15. 38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல்

75பார்த்தது
தஞ்சை மாநகராட்சியில் ரூ. 15. 38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல்
தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.15.38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நடந்தது. மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 2024 25ம்2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்குக் குழு தலைவர் வெங்கடேஷ் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தஞ்சை மாநகராட்சியில் 2025-26ம் நிதியாண்டில் வருவாய் மூலதன நிதிப்பிரிவில் ரூ.299.63 கோடிக்கும், குடிநீர் மற்றும் வடிகால் நிதிப்பிரிவில் ரூ.24.05 கோடிக்கும், கல்வி நிதிப்பிரிவில் ரூ.4.36 கோடிக்கும் என மொத்தம் ரூ. 328. 04ரூ.328.04 கோடிக்கு வரவினம் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் வருவாய் மற்றும் மூலதனப்பிரிவில் ரூ.290.65 கோடிக்கும், குடிநீர் மற்றும் வடிகால் நிதிப்பிரிவில் ரூ.21.14 கோடிக்கும், கல்வி நிதிப்பிரிவில் ரூ. 85. 89ரூ.85.89 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.312.65 கோடிக்கும் செலவினம் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த வரவினங்கள் ரூ.328.04 கோடியும், செலவினங்கள் ரூ. 312. 65ரூ.312.65 கோடியும் எதிர்பார்க்கப்படுவதால் இந்த முறை ரூ.15.38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
Job Suitcase

Jobs near you