தஞ்சாவூர்: துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம்

65பார்த்தது
தஞ்சாவூர்: துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம்
பட்டுக்கோட்டை புறவழிச் சாலையில் இறந்த பன்றி, மாடு, கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. புறவழிச்சாலை துவங்கும் இடம் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானதாகும். இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மிகப்பெரிய போர்டு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த இடத்தை தனியார்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது. இங்கு மரங்கள் வளர்க்கப்படுகிறது என பெயரளவிற்கு போர்டு மட்டுமே உள்ளது. ஆனால் கீழ வஸ்தா சாவடி தொம் பன் குடிசை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கழிவுகளை வாகனங்களில் எடுத்து வந்து இப்பகுதியில் கொட்டி செல்கின்றனர். அதுமட்டுமின்றி, இறந்துபோன பன்றி, மாடு, நாய் போன்றவற்றையும் வீசி விட்டு நெடுஞ்சாலை ஓரத்தை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடுமையான தூர்நாற்றம் கடுமையாக வீசுகிறது. 

அந்த இடத்தைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் வாந்தி எடுக்காமல் கடந்து செல்கின்றனர். அங்கு குவியும் குப்பைகளால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஊராட்சியாக இருந்த இந்தப் பகுதி மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு அந்த இடத்தில் குப்பைக் கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி