தஞ்சாவூர்: மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் போட்டி

72பார்த்தது
தஞ்சாவூர்: மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் போட்டி
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி மாவட்ட நீச்சல் கழகம் சார்பில் நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் பிரீஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், பட்டர்பிளை என 10 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் ரஞ்சித், நீச்சல் கழகத்தைச் சேர்ந்த தம்பா, கோவி, மோகன், சந்தோஷ், சசிகுமார், ராஜேந்திரன் மற்றும் நீச்சல் வீரர், வீராங்கனைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி