தஞ்சாவூர்: தீ விபத்தில் எலக்ட்ரீசியன் படுகாயம்

57பார்த்தது
தஞ்சாவூர்: தீ விபத்தில் எலக்ட்ரீசியன் படுகாயம்
தஞ்சை கீழவாசல் குறிச்சி சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவரது மகன் சற்குருநாதன் (வயது 30). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சற்குருநாதன் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சற்குருநாதன் இருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறை முழுவதும் தீ மளமளவென பரவியது. அப்போது அறையில் சிக்கிக் கொண்ட சற்குருநாதன் வெளியே வர முடியாமல் தவித்தார். 

இது குறித்த தகவலின் பேரில் தஞ்சை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த சற்குருநாதனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி