தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்ட இளைஞர்களை மியான்மர் அழைத்து சென்று மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ராஜ்குமார், மணவாளன், தீபக், அபிஷேக்ராஜன் ஆகிய 4 ஏஜென்ட்கள் கைது செய்யப்பட்டனர். சுற்றுலா விசா மூலம் மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 465 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 35 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.