முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர மாவட்ட தலைவர் எம். மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.