தஞ்சாவூர் பெரிய கோயில் அகழி மற்றும் சிறிய கோட்டை மதில் சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் தூய்மைப் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. ஆனால், தொல்லியல் துறையின் அனுமதி இல்லாததால் இப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் வரலாற்று ஆர்வலர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. ஒரு மாதத்திற்குள் தாங்களே ஒப்பந்தப் புள்ளி மூலம் இப்பணியைத் தொடங்குவோம் என தொல்லியல் துறை விளக்கமளித்துள்ளது.