தஞ்சாவூர்: பிப். 18 முதல் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

9பார்த்தது
தஞ்சாவூர்: பிப். 18 முதல் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசு நடத்தும் எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்க, 2 கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் அழைக்கலாம்.

தொடர்புடைய செய்தி