தஞ்சாவூர்: இஞ்சிக்கு வந்த வாழ்வு, கிலோ ரூ. 170 க்கு வி‌ற்பனை

367பார்த்தது
தஞ்சாவூர்: இஞ்சிக்கு வந்த வாழ்வு, கிலோ ரூ. 170 க்கு வி‌ற்பனை
தஞ்சாவூர் உழவர் சந்தையில் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. அறுவடைக் காலம் முடிந்து நடவு காலம் தொடங்கியுள்ளதால், இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்ற இஞ்சி, தற்போது மொத்த விலையில் ரூ.160 ஆகவும், சில்லறை விற்பனையில் ரூ.150 முதல் ரூ.170 வரையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி