தஞ்சாவூர்: குழாய் பொருத்தப்பட்ட மண் பானைக்கு கடும் மவுசு

0பார்த்தது
தஞ்சாவூர்: குழாய் பொருத்தப்பட்ட மண் பானைக்கு கடும் மவுசு
தஞ்சையில் கோடை வெயில் கடுமையாக இருப்பதால், பொதுமக்கள் உடல் சூட்டைத் தணிக்க மண்பானைகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். குறிப்பாக, தண்ணீர் எடுக்க எளிதாக குழாய் பொருத்தப்பட்ட மண்பானைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. சாதாரண பானைகள் ரூ. 250க்கும், குழாய் பொருத்தப்பட்ட பானைகள் ரூ. 300க்கும் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி