தஞ்சை கரந்தை கருணாசுவாமி கோயில் ஏழூர் பல்லக்கு ஜூன். 1ல் உலா

75பார்த்தது
தஞ்சை கரந்தை கருணாசுவாமி கோயில் ஏழூர் பல்லக்கு ஜூன். 1ல் உலா
தஞ்சை கரந்தை கருணாசுவாமி (வசிஷ்டேஸ்வரர்) கோயில் வைகாசி விசாக விழாவின் முக்கிய நிகழ்வான ஏழூர் பல்லக்கு புறப்பாடு ஜூன் 1-ம் தேதி அதிகாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. வசிஷ்டேஸ்வரர்-பெரியநாயகி அம்பாள் கண்ணாடி பல்லக்கிலும், வசிஷ்டர்-அருந்ததிதேவி வெட்டிவேர் பல்லக்கிலும் கரந்தை, திட்டை, புன்னைநல்லூர் உள்ளிட்ட ஏழு ஊர்களுக்கு உலா செல்கின்றனர். மறுநாள் (ஜூன் 2) தஞ்சை நான்கு வீதிகள் வழியாக பல்லக்குகள் மீண்டும் கோயிலை வந்தடைந்தவுடன், புகழ்பெற்ற 'பொம்மை பூ போடும் நிகழ்வு' நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக மே 29-ல் தேரோட்டமும், மே 30-ல் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி