தஞ்சாவூர்: மே. 29 ல் இடதுசாரிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

489பார்த்தது
தஞ்சாவூர்: மே. 29 ல் இடதுசாரிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசின் மேகதாது அணை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மே 29 அன்று மாலை தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் இடதுசாரி மாநிலச் செயலாளர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பர் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி