தஞ்சாவூரில் தமிழ்நாடு மக்கள்
விடுதலை இயக்கம் சார்பில் 'பெரியார் 360 பாகை' கருத்தரங்கில் பேசிய தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பொழிலன், பெரியாரின் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கு முன், இயக்கங்களிடம் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சமூகத்திற்காக பெரியார் ஆற்றிய பணிகள் மற்றும் அவரது கருத்துக்களின் இன்றைய தேவை குறித்து இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர்.